தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பு! - kalvikalam

திங்கள், 7 ஜூன், 2021

தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பு!

தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பு!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஓய்வூதியதாரர்கள் அலுவலகம் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

உயிர்வாழ் சான்றிதழ்:

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழ், திருமணம் அல்லது மறுமணம் செய்ததற்கான சான்றிதழை அந்தந்த மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படா விட்டால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி ஓய்வூதியதாரர்களை நேரில் அழைப்பார். அந்த நபர் வரவில்லை எனில் அந்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி உயிர்வாழ் சான்றிதழை ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒப்படைக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. கொரோனா தொற்று அதிகம் பாதிக்கக் கூடிய வயதினராக ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இருப்பதால் அவர்கள் வெளியில் வருவது பாதுகாப்பானதாக இருக்காது. இதனால் வயதானவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் இருக்கும் காரணத்ததால் கால நீட்டிப்பு செய்வதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த வருடம் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் இந்த தொற்று சூழ்நிலையை ஆராய்ந்து இந்த ஆண்டுக்கான உயிர்வாழ் சான்றிதழையும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒப்படைக்கலாம் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால் கடந்த வருடத்தை விட இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் அச்சத்தால் 2021ம் ஆண்டிற்கான உயிர்வாழ் சான்று அளிப்பதிலிருந்து இந்த வருடம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் யாரும் அலுவலகம் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot