கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வணிகவியல், வரலாறு பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தேர்வு பட்டியல்
கடந்த இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு துறையிலும் போட்டித் தேர்வுகள் நடப்படாமல் இருந்தன. தமிழகத்தில் இல்லாமல் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பித்தது. மேலும் காலியிடங்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன. இதனால் மக்கள் அனைவரும் இந்த வருடம் நடக்கும் போட்டித் தேர்வுக்கு அதிகமான அளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – அரசுக்கு வலியுறுத்தல்!
அதனை தொடர்ந்து 2018-2019-ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகள் நடத்தப்பட்டது மற்றும் உடற்கல்வி இயக்குநர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 2019-ம் ஆண்டு செப்.27 முதல் செப் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் போட்டித் தேர்வை நடத்தியது. அதன் பிறகு தேர்வுக்கான முடிவுகள் 2019 அக். 18 மற்றும் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைதொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு 2019 ம் ஆண்டு நவ. 8ம் தேதி மற்றும் 9-ம் தேதி நடத்தப்பட்டன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பாடவாரியாக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, வணிகவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக