இது குறித்து, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த 2021ல், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, திட்டமிட்ட தேதியை விட ஐந்து மாதங்கள் தாமதமாக நடந்தது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தபடியால், கலந்தாய்வும் தாமதமானது.
பல்வேறு மாநிலங்களில், 2021ம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் இம்மாத மத்தியில் தான் முடிவடைகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, 21ல் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு கலந்தாய்வு மற்றும் நடப்பாண்டுக்கான தேர்வுக்கு இடையே கால அவகாசம் குறைவாக உள்ளது.
கடந்த ஆண்டில் தேர்வாகாமல் தவறியவர்கள், நடப்பாண்டு தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தேதிகளை, டாக்டர்கள் நலன் கருதி ஒத்திவைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக