நாளை வெளியாக இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு. - kalvikalam

வியாழன், 16 ஜூன், 2022

நாளை வெளியாக இருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு.



10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம். புதிய அறிவிப்பின்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.




தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை (when will school reopen in tamil nadu) அறிவித்திருந்த நிலையில், 10 ,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த வாரம் நிறைவடைந்தது.




இந்நிலையில், நாளை வெளியாக உள்ள 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியிட உள்ளதாகவும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10மற்றும் 12 ஆம் வகுப்பு மதேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களை பார்வையிடுவதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம் எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:முதலில், அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிடவும் - www.tnresults.nic.in.
இப்போது முகப்புப்பக்கத்தில் காணப்படும் முடிவுகளின் பட்டியலை பார்வையிடவும்.
அதில், 'SSLC Exam 2022 Results' அல்லது 'HSC Exam 2022 Results" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இப்போது, பொதுத்தேர்வுகளை சரிபார்ப்பதற்காக சாளரம் திறக்கப்படும்.
அதில், உங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். (DOB dd/mm/yyyy வடிவத்தில் உள்ளிடப்பட வேண்டும்).
பின்னர், "Get Marks" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்போது, TN போர்டு தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும்.

2022 ஆம் ஆண்டுக்கான TN போர்டு தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கி, விவரங்களின் துல்லியத்தை உறுதிப்படுத்தவும்.

இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "மே 2022 -யில் நடைபெற்ற 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மற்றும் பத்தாம் வகுப்பு (S.S,.L.C) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2022 (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

தேர்வு முடிவு வெளியடப்படும் நாள் மற்றும் நேரம் இணைய தள முகவரி குறித்த விவரம்:

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.

இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in.




10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 12:00 மணிக்கு வெளியிடப்படும்.

இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in.

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot