ஆசிரியர்களும் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள் - விழியன் - kalvikalam

புதன், 1 ஜூன், 2022

ஆசிரியர்களும் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள் - விழியன்

 

வே.வசந்தி தேவி எழுதிய இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம் ' என்ற  கட்டுரையின் ( 30.05.22 ) பேசுபொருள் முக்கியமானது. ஆனால் , அணுகுமுறையில் முரண் தென்படுகின்றது.

1. இந்தக் கட்டுரையில் ஆசிரியர்கள்தான் குற்றவாளிகள் என்ற தொனி மேலெழுகிறது. கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களிடம் இந்த கரோனா காலகட்டத்தில் பேசினார்கள் ; தொடர்பில் இருந்தார்கள் ; எப்படி இருக்கிறார்கள் என விசாரிக்கவும் செய்தார்கள். விகிதாச்சாரத்தில் மாறுபாடு இருக்கலாம். எல்லா மாணவர்களிடமும் ஆசிரியரின் கைபேசி எண் இருந்தது ( வாட்ஸ்அப் குழுவில்தானே செய்தி கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது ). ஆனால் , இது ஒரு சமூகக் கடமை , ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து மாணவர்களைக் கைப்பிடித்துத் தூக்க வேண்டும் , துயரிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அவர்களின் தொடர்பில் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம்.

2. கரோனா காலகட்டத்துக்குப் பின்னர் , பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் குழந்தைகளுடன் உரையாடுவதற்கு ஆசிரியர்களுக்கு அவகாசம் இருந்ததா ? அவகாசம் கொடுக்கப்பட்டதா ? அவர்கள் பெரும்பாலான நேரம் , அரசுக்குத் தகவல்கள் , தரவுகள் திரட்டுபவர்களாகத்தானே இருந்தார்கள் . கற்றல் - கற்பித்தலுக்குக் குறைந்த நேரமே கிடைத்தது . கட்டுப்பாடுகள் , சுழற்சி முறையில் வகுப்பறைகள் என வழக்கத்தைவிடக் கூடுதல் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot