தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - kalvikalam

வெள்ளி, 10 மார்ச், 2023

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

 

தமிழகத்தில் நான்கு  மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் 

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் திங்கட்கிழமை பாடவேளையை பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://www.kalvikalam.com/2023/03/blog-post.html

தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கிய கனமழை டிசம்பர் வரையிலும் பரவலாக பெய்தது.

இந்த மழையின் காரணமாக கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகினர.இதனை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த மழை கால விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறைகளை ஈடு செய்யும் வண்ணம் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) சென்னை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையில் வகுப்புகள் நடைபெறும். அதே போல காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளிலும் நாளை திங்கட்கிழமை பாட வேளையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக எழுத வழிகாட்டும் நோக்கில் நாளை (மார்ச் 11) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / உயர் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot