2021 ஜேஇஇ மற்றும் முதுநிலை நீட் தேர்வுகள் – தேர்வு அட்டவணை குறித்த விவரங்கள்!! - kalvikalam

சனி, 5 ஜூன், 2021

2021 ஜேஇஇ மற்றும் முதுநிலை நீட் தேர்வுகள் – தேர்வு அட்டவணை குறித்த விவரங்கள்!!

நடப்பு ஆண்டின் தள்ளிவைக்கப்பட்ட ஜேஇஇ தேர்வுகள் மட்டும் முதுநிலை நீட் தேர்வுகள் குறித்த புதிய அறிவிப்புகளை இந்த பதிவில் காணலாம்.

நுழைவுத்தேர்வுகள்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக நடப்பு ஆண்டின் ஜேஇஇ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க நடப்பு ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் நான்கு கட்டங்களாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய நான்கு மாதங்களில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஜேஇஇ நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்து விட்டது.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக நாட்டின் பல முக்கிய நுழைவுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்றின் நிலைமையை கல்வி அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய உள்ளது. கல்லூரிகளில் புதிய அமர்விற்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஜே.இ.இ மெயின் (ஏப்ரல் மற்றும் மே) மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் ஆகியவற்றை ஆகஸ்ட் மாதம் நடத்துவது குறித்த முடிவுகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும்.

மேலும், ஜே.இ.இ மெயின் மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி நீட் முதுநிலை தேர்வை நடத்துவது பற்றி மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. ஜே.இ.இ தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. என்.டி.ஏ நிறுவனம் தேர்வுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பை தெரிவிக்கும். தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் JEE Main 2021 தேர்வு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான jeemain.nta.nic.in மற்றும் nta.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot