பாரதிதாசன் பல்கலை UG, PG மாணவர் சேர்க்கை – விண்ணப்ப பதிவு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் வெளிவந்த பின்னர் இளங்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை முதலில் தேர்வு நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி காரணமாக கட்டாயம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்த கூடாது என கல்வியாளர்கள், பெற்றோர்கள் கருத்து கேட்பு முடிவில் தெரிவித்ததை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் வெளிவந்த உடன் நடைபெறும் என பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, டிப்ளமோ படிப்புக்களில் சேர வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பதிவாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார். இளங்கலை படிப்பிற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் வெளிவந்து 15 நாட்களுக்கு பின்னர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.bdu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக